Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெஸ்ட் போட்டிகளில் ஆட தயார்-துலீப் கோப்பையில் இரட்டைசதம் அடித்து நிரூபித்தார் யுவராஜ் சிங்

Posted by:
Published: Monday, October 15, 2012, 15:56 [IST]
 

டெஸ்ட் போட்டிகளில் ஆட தயார்-துலீப் கோப்பையில் இரட்டைசதம் அடித்து நிரூபித்தார் யுவராஜ் சிங்
 

ஹைதராபாத்: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் யுவராஜ் சிங் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆட தகுதியுள்ளவர் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன்பிறகு கடும் பயிற்சி மேற்கொண்டு தனது பார்மை மீட்டுள்ளார்.

இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உடல்தகுதி கொண்டவரா என்ற சந்தேகம் நீடித்தது. இதனால் தற்போது உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.

துலீப் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் நார்த் சோன் அணிக்காக யுவராஜ் சிங் ஆடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் யுவராஜ் சிங் பேட்டிங் செய்து அதிரடியாக ஆடினார்.

சென்ட்ரல் சோன் அணிக்கு எதிரான போட்டியில் 2வது நாளாக பேட்டிங் செய்து வரும் யுவராஜ் சிங் 241 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 33 பவுண்டரிகளை அடித்து இரட்டை சதம் கடந்தார். முரளி கார்த்திக்கின் பந்துவீச்சில் 2 சிக்ஸ் அடித்து அசத்திய யுவராஜ் சிங், அவரது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.

புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள யுவராஜ் சிங், துலீப் கோப்பை தொடரில் இரட்டை சதமடித்து, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆட தனது தகுதியை நிரூபித்து காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Yuvraj Singh has cracked a double century on Day 2 of the Duleep trophy semifinal fixture against Central Zone in Hyderabad on Monday.
கருத்தை எழுதுங்கள்