Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மார்டின் க்ரோவிற்கு புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிப்பு

Posted by:
Updated: Tuesday, October 16, 2012, 16:05 [IST]
 

முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மார்டின் க்ரோவிற்கு புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
 

பெங்களூர்: முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்டின் க்ரோவிற்கு, நிணநீர் சுரப்பி புற்றுநோய் ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்டின் க்ரோ(50). 77 டெஸ்ட் போட்டிகள், 143 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், நிணநீர் சுரப்பி புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மார்டின் க்ரோவின் மேலாளர் லுயீஸ் ஹென்டர்சன் கூறியதாவது,

முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டின் க்ரோவிற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ஆறுதல்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

லிம்போமாஸ் என்றால் என்ன?

லிம்போமாஸ் என்று அழைக்கப்படும் நிணநீர் சுரப்பி புற்றுநோய், வெள்ளையணுக்களின் மாற்றத்தினால் ஏற்படுவது. லிம்போசைட்ஸ் எனப்படும் வெள்ளையணுக்கள், மாற்றம் அடைந்து அபரிமித வளர்ச்சி அடைந்து, அதுவே ஒரு புற்றுநோய் கட்டியாக உருவாகும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயாளி கடும் பாதிப்பு அடைவர்.

Story first published:  Tuesday, October 16, 2012, 11:11 [IST]
English summary
Former New Zealand captain Martin Crowe has been diagnosed with lymphoma, New Zealand media reported.
கருத்தை எழுதுங்கள்