Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்: ஹர்பஜன் சிங்

Posted by:
Updated: Tuesday, October 16, 2012, 17:20 [IST]
 

அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்: ஹர்பஜன் சிங்
 

ஜோகனஸ்பார்க்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்லீக் டுவென்டி20 தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டியில் ஹவால்டு லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதில் அதிருப்தி அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங், இனிவரும் போட்டிகளில் கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இனி வரும் போட்டிகளில் சொதப்பலாக ஆடாமல், மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக ஆட வேண்டும். போட்டியின் போது சற்று பனிப்பொழிவு இருந்தது. ஆனால் தோல்விக்கு அதை காரணம் காட்ட முடியாது. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

எதிரணியின் சுழல்பந்துவீச்சை நாங்கள் அடித்து ஆடவில்லை என்று கருதுகிறேன். அதேபோல முக்கிய பந்துவீ்ச்சாளர் டிர்க் நானிஸ் வீசிய பந்துகளில் நாங்கள் ரன் சேர்க்க திணறினோம். இதனால் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் மைக்கேல் ஜான்சன் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேனாக உள்ளார் என்பது ஒரு பின்னடைவு. எதிரணியில் மெக்கின்ஸ் சிறப்பாக ஆடினார். லயன்ஸ் அணிக்கு நன்கு பழக்கமுள்ள ஆடுகளத்தில் இறங்கியது, சாதகமாக அமைந்தது என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக ஆட வேண்டும் கூறும் கேப்டன் ஹர்பஜன் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்களை கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Tuesday, October 16, 2012, 16:52 [IST]
English summary
Mumbai Indians skipper Harbhajan Singh admitted that the team failed miserably and said that they had to play better cricket after their eight-wicket loss to Highveld Lions.
கருத்தை எழுதுங்கள்