Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உள்ளூர் போட்டியில் இரட்டை சதம்-இந்திய டெஸ்ட் அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு?

Posted by:
Updated: Wednesday, October 17, 2012, 18:19 [IST]
 

உள்ளூர் போட்டியில் இரட்டை சதம்-இந்திய டெஸ்ட் அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு?
 

பெங்களூர்: உள்ளூர் போட்டியில் இரட்டை சதம் அடித்த யுவராஜ் சிங், இந்திய டெஸ்ட் அணியில் ஆட தனது தகுதியை நிரூபி்த்துள்ளார். தற்போது 6வது பேட்ஸ்மேனாக அணியில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா மோசமாக ஆடி வருவது, யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பை பெற்று தருமா என்றசந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். டுவென்டி20 போட்டிகளில் மட்டுமே ஆட வாய்ப்பு பெற்றுள்ள யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில் தனது பங்களிப்பை அளிக்க காத்திருக்கிறார்.

துலீப் கோப்பைக்கான உள்ளூர் போட்டியில் இரட்டைசதம் அடித்த யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிகளில் ஆட தனது உடல்தகுதியை நிரூபித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

சுரேஷ் ரெய்னா:

கடந்த 2010ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் சுரேஷ் ரெய்னா, இதுவரை 17 போட்டிகளில் பங்கேற்று 768 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதம் அடித்துள்ளார். இதனால் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவை களமிறக்குவது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோல ஒருநாள் போட்டிகளில் பார்ம் இல்லாமல் தவிக்கும் ரோஹித் சர்மாவை, டெஸ்ட் போட்டிகளில் களமிறக்க தேர்வுக்குழுவினர் யோசித்து வருகின்றனர். இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இளம்வீரர் பத்ரிநாத் சொல்லி கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. 2 போட்டிகளில் ஒரு அரைசதம் அடித்து மொத்தம் 63 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

மேலும் இளம்வீரர்கள் மனோஜ் திவாரி, ரவீந்தர ஜடேஜா ஆகியோருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க காத்திருக்கின்றனர். இதனால் இந்திய அணியில் 6வது பேட்ஸ்மேனாக அனுபவ வீரர் யுவராஜ் சிங் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த மாதம்(நவம்பர்) இங்கிலாந்திற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. உள்ளூரில் நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் யுவராஜ் சிங் டெஸ்ட் அணியில் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published:  Wednesday, October 17, 2012, 18:04 [IST]
English summary
Following Yuvraj Singh's success in the domestic circuit, looks like it is time for the left-handed batsman to cement the No 6 slot in Tests.
கருத்தை எழுதுங்கள்