Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சாம்பியன்ஸ் லீக் தொடரில் 'அவுட்'

Posted by:
Updated: Thursday, October 18, 2012, 15:07 [IST]
 

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சாம்பியன்ஸ் லீக் தொடரில் 'அவுட்'
 

டர்பன்: இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடரில் அரையிறுதி போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மழை குறுக்கிட்டதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பறிப்போனது.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் 'ஏ' பிரிவை சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.

தொடரில் ஏற்கனவே 2 லீக் போட்டிகளில் தோல்வி அடைந்ததால், நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியது. இதனால் அணியில் சாகிப் அல் ஹசன், ரஜாத் பாட்யா ஆகியோர் நீக்கப்பட்டு, தேபபிரதா தாஸ், பிரட் லீ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

போட்டியின் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் துவக்க வீரர் கிப்ஸ் சந்தித்த 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பிறகு ஷேன் மார்ஷ், சைமன் காடிச் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினார். அவ்வப்போது அதிரடியை காட்டிய ஷேன் மார்ஷ், 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 38 ரன்களை எடுத்து அவுட்டானார்.

இந்த நிலையி்ல 14வது ஓவரின் முடிவில் மழை குறுக்கிட்டது. அப்போது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை எடுத்திருந்தது. சைமன் காடிச்(43), மிட்சல் மார்ஷ்(5) ஆகியோர் அவுட்டாகாமல் இருந்தனர்.

அதன்பிறகு மழை தொடர்ந்து பெய்ததால், போட்டியை தொடர முடியாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா 2 புள்ளிகள் அளிக்கப்பட்டது. இதனால் 2 தோல்விகளை பெற்று நேற்று கட்டாய வெற்றியை முன்வைத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.

இதனால் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றாலும், 6 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published:  Thursday, October 18, 2012, 15:06 [IST]
English summary
IPL champions Kolkata Knight Riders crashed out of Champions League T20 after the group match against Perth Scorchers was called off due to rain at Durban on Wednesday.
கருத்தை எழுதுங்கள்