Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

உள்நாட்டு போட்டிகளிலும் கவாஸ்கரை பின்னுக்கு தள்ள சச்சினுக்கு வாய்ப்பு!

Posted by:
Published: Friday, October 19, 2012, 15:12 [IST]
 

உள்நாட்டு போட்டிகளிலும் கவாஸ்கரை பின்னுக்கு தள்ள சச்சினுக்கு வாய்ப்பு!
 

மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனை வீரராக வலம் வரும் சச்சின், தற்போது இந்தியாவில் நடைபெறும் முதல்தர போட்டிகளிலும் சாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் கவாஸ்கரின் சாதனைகளை நெருங்கியுள்ள சச்சின் ரஞ்சி கோப்பையில் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடியவர், அதிக சதங்களை அடித்தவர் என்று பல சாதனைகளை படைத்தவர். சர்வதேச போட்டிகளில் கடந்த 23 ஆண்டுகளாக ஆடி வரும் சச்சின், உள்ளூர் போட்டிகளிலும் அவ்வப்போது ஆடி வந்தார்.

ஆனால் இந்தியாவில் நடைபெறும் முதல் தர போட்டிகளில் அதிக ரன்களை சேர்த்தவர், அதிக சதங்களை அடித்தவர்கள் ஆகிய பட்டியல்களில் முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் அவரது சாதனைகளை முறியடிக்க சச்சினுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற 348 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள கவாஸ்கர், 81 சதங்கள் உட்பட 25,843 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து 2வது இடத்தில் சச்சின் உள்ளார். இதுவரை 294 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் 78 சதங்கள் அடித்து 24,452 ரன்களை எடுத்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு ரஞ்சி கோப்பையின் அரையிறுதி போட்டியி்ல் ஆடிய சச்சின் சதமடித்தார். அதே தொடரின் இறுதி போட்டியிலும் சதமடித்தார். அதன்பிறகு முதல் தர போட்டிகளில் சச்சின் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் அடுத்த மாதம்(நவம்பர்) 2ம் தேதி துவங்க உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட போவதாக சச்சின் அறிவித்துள்ளார். எனவே ரஞ்சி கோப்பை போட்டிகளில் சச்சின் 3 சதங்களும், 1,383 ரன்களும் எடுத்தால், கவாஸ்கரின் சாதனைகளை சச்சின் முறியடிக்கலாம்.

தற்போது 39 வயதாகும் சச்சின், சர்வதேச அளவில் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more about: sachin, cricket, சச்சின்
English summary
Hype surrounds Mumbai's Ranji Trophy matches, as Sachin Tendulkar has decided to make an appearance for his state in the tournament, which offers him a golden opportunity to surpass Sunil Gavaskar's first class record of 81 centuries.
கருத்தை எழுதுங்கள்