Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: உமேஷ் யாதவ்

Posted by:
Published: Friday, October 19, 2012, 17:11 [IST]
 

தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: உமேஷ் யாதவ்
 

பெங்களூர்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிவரும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்விற்கு, தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் ஆடி வருகின்றன. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. மற்ற 3 அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்களில் ஆட திணறி வருகின்றன.

இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில், பந்துவீச வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

தென் ஆப்பிரிக்ககாவில் பந்துவீசுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அதிகளவில் பவுன்ஸாகும் தன்மை கொண்ட தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் பந்துவீசுவது ஒரு சிறந்த அனுபவம் ஆகும். சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள எனக்கு, ஆஸ்திரேலியாவில் ஆடிய போது, பவுன்ஸர் ஆடுகளங்களில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தின் மூலம், இங்கேயும் பந்துவீசி வருகிறேன்.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள், ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களை போலவே ஒத்துள்ளன. இங்குள்ள ஆடுகளங்களில் சிறியளவில் புற்கள் காணப்படுவதால், வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பு அளிக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளர்களின் கனவு. இது போன்ற ஆடுகளங்களில் விளையாடவே நானும் மிகவும் விரும்புகிறேன். சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றதன் மூலம், நான் பெரும் பயன் அடைந்துள்ளேன். எனது பந்துவீச்சில் உள்ள ஸ்வீங் மற்றும் பவுன்ஸர் ஆகியவை எனது பலமாக கருதுகிறேன். எனவே அதன்மூலம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார்.

English summary
India and Delhi Daredevils fast bowler Umesh Yadav is relishing bowling on South African pitches in the ongoing Champions League Twenty20.
கருத்தை எழுதுங்கள்