Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: இன்று மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு சிக்கல்

Posted by:
Published: Saturday, October 20, 2012, 12:02 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்: இன்று மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு சிக்கல்
 

ஜோகன்ஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டு ரத்தானால், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடரில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாம்பியன்ல் லீக் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சேர்ந்த 4 அணிகள் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டதால், நடப்பு ஐபிஎல் தொடர் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தினமும் நடைபெறும் போட்டிகளில் மழை குறுக்கிட்டு வருகிறது. இதுவரை தொடரில் 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியும் மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் வழக்கம் போல இன்று போட்டியில் மழை குறுக்கிட்டு, போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் அளிக்கப்படும்.

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் இன்று நடைபெற உள்ள லயன்ஸ், யார்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியும் முக்கியத்துவம் வகிக்கிறது. இதில் லயன்ஸ் அணி வெற்றி பெற்றால், அரையிறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

அதேபோல லயன்ஸ், யார்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டாலும், புள்ளிகள் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடரில் இருந்து வெளியேறிவிடும். இன்றைய முதல் போட்டியின் போது மழை பெய்யாமல் யார்க்ஷையர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்புள்ளது.

மேலும் முதல் போட்டியில் யார்க்ஷையர் அணி வெற்றி பெற்றும், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேற்றும்.

இதனால் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், யார்க்ஷையர் அணியும் வெற்றி பெற வேண்டும். மழை பெய்ய கூடாது என்று சென்னை ரசிகர்கள் விரும்புகின்றனர். வருண பகவான கருணை காட்டுவாரா?

English summary
Chennai Super Kings team is not expecting rain today to reach semi finals in Champions League 2012. If rain washout today's match, Chennai Super Kings will go out of the series.
கருத்தை எழுதுங்கள்