Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஷேவாக்கும்-கம்பிரும் 'பார்ம்' இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது: கபில்தேவ்

Posted by:
Published: Saturday, October 20, 2012, 18:14 [IST]
 

ஷேவாக்கும்-கம்பிரும் 'பார்ம்' இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது: கபில்தேவ்
டெல்லி: இந்திய வீரர்களான ஷேவாக்கும், கம்பிரும் சமீபகால டெஸ்ட் போட்டிகளில் மோசமாக ஆடி வருவது வருத்தம் அளிப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்கள் ஷேவாக், கம்பிர். அதிரடிக்கு பெயர் பெற்ற இருவரும், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிலாக ஆடி வருகின்றனர்.

2012ம் ஆண்டு இதுவரை இந்திய துவக்க வீரர் ஷேவாக் மொத்தம் 9 ஒருநாள் போட்டிகளில் ஆடி, மொத்தம் 213 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்து, 23.66 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள ஷேவாக் மொத்தம் 252 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 62 ரன்களும், சராசரியாக 28 ரன்கள் வைத்துள்ளார்.

கம்பிரை பொறுத்தவரை இந்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 223 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 83 ரன்களும், சராசரியாக 24.77 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கம்பிரின் ஆட்டம் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த ஆண்டு 15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கம்பிர் 677 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 102 ரன்களும், சராசரியாக 45.13 ரன்களும் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களும், 5 அரைசதங்களும் உட்படும்.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மேற்கண்ட இரு வீரர்களின் ஆட்டத்தை கவனித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், இருவரும் தற்போது பார்ம் இல்லாமல் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்ட கபில்தேவ் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது,

திறமை மிகுந்த பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்க்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகும். இருவருக்கும் இந்திய அணியில் பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் தங்களின் பொறுப்பை ஏற்று ஆட வேண்டியுள்ளது.

இந்திய அணியில் துவக்க வீரர்களான ஷேவாக் மற்றும் கம்பிர் ஆகியோரின் பார்ம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இருவரும் அணிக்காக அதிக ரன்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட முறையிலும் ரன்களை சேர்க்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது வருத்தம் அளிக்கும் ஒரு செயலாகும் என்றார்.

English summary
Former India skipper Kapil Dev feels the recent form of Virender Sehwag and Gautam Gambhir would be a concern for Team India as they are scheduled to play Test series against Australia and England in the coming months.
கருத்தை எழுதுங்கள்