Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டோனி கிரேக்கிற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு-மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு

Posted by:
Published: Saturday, October 20, 2012, 18:51 [IST]
 

டோனி கிரேக்கிற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு-மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு
 

பெங்களூர்: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டோனி கிரேக்கிற்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக, ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி கிரேக்(66). கடந்த 1972 முதல் 1977 வரையிலான காலக்கட்டத்தில் சர்வதேச அளவிலான 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதன்பிறகு ஓய்வு பெற்ற டோனி கிரேக், கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், நுரையீரல் புற்றுநோய் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டோனி கிரேக்கிற்கு அடுத்த வாரம் முதல் புற்றுநோய் சிகிச்சை துவக்கப்படலாம் என்று தெரிகிறது.

இது குறித்து டோனி கிரேக் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,

ஏற்கனவே எனது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து வருகிறேன். தற்போது மேலும் ஒரு சாவலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை நானும் எனது மனைவியும் சேர்ந்து எதிர்கொள்ள உள்ளோம் என்றார்.

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் போது, கிரிக்கெட் வர்ணனையின் இடையே தனது உடல்நிலையில் ஏதோ பிரச்சனை இருப்பதாக டோனி கிரேக் கூறினார்.

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். அதேபோல சமீபத்தில் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மார்டின் கிரேவ், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Former England captain turned commentator Tony Greig has been diagnosed with cancer, a report in an Australian newspaper said on Saturday.
கருத்தை எழுதுங்கள்