Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐ.பி.எல். ஜாம்பவான்கள் சென்னை, மும்பை அணிகள் சாம்பியன்ஸ் லீக்கில் வெளியேற்றம்

Posted by:
Published: Sunday, October 21, 2012, 12:09 [IST]
 

ஐ.பி.எல். ஜாம்பவான்கள் சென்னை, மும்பை அணிகள் சாம்பியன்ஸ் லீக்கில் வெளியேற்றம்
 

ஜோகன்ஸ்பெர்க்: ஐ.பி.எல். போட்டிகளில் ஜாம்பவான்களாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போதைய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலிருந்து பரிதாபமாக வெளியேறியிருக்கிறது.

நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றன. இதில் டெல்லியை தவிர மற்ற 3 அணிகளும் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டன. டெல்லியின் கதி இனிதான் தெரிய வரும்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2010, 2011 ஆண்டுகளின் சாம்பியன் அணியாகும்! ஆனால் தற்போதைய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அரை இறுதிக்குக் கூட நுழைய முடியாமல் தலையை தொங்கப் போட்டுவிட்டது! இதில் 2010-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் சாம்பியனும்கூட சென்னை அணி!

சாம்பியன்ஸ் லீக்கில் 2-வது முறையாக விளையாடிய கொல்கத்தா இம்முறையும்கூட அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இதேகதிதான்!

ஐபிஎல் ஜாம்பவான்கள் அனைவருமே தென்னாப்பிரிக்காவில் சொதப்பிக் கொண்டது பரிதாபமே!

English summary
Highveld Lions on Saturday defeated Yorkshire comfortably by five wickets in a Group B encounter of the ongoing Champions League Twenty20 in Johannesberg, which effectively dashed the hopes of two IPL teams, defending champions Mumbai Indian and Chennai Super Kings.
கருத்தை எழுதுங்கள்