Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்- சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு முதல் வெற்றி- ஆனாலும் வேஸ்ட்!

Posted by:
Updated: Sunday, October 21, 2012, 12:57 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்- சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு முதல் வெற்றி- ஆனாலும் வேஸ்ட்!
 

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ்லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸும் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், டுபிளிசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்க ஓவர் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்தது, இந்நிலையில் டுபிளிசிஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ரெய்னா 8 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஆடிய கேப்டன் டோணி, 35 ரன்களைக் குவிக்க 20 ஓவர் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் டெண்டுல்கர் மற்று சுமித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டெண்டுல்கர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். அந்த அணியில் சர்மா- தினேஷ் கார்த்திக் ஜோடி கலக்கியது. ஆட்டம் முடிவடையும் போது பரபரப்பு தொற்றிக் கொண்டது. 18 பந்துகளில் 51 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிைலயில் இருந்தது முக்ம்பை இந்தியன்ஸ் அணி. 18-வது ஓவரில் மட்டும் 24 ரன்களைக் குவித்து அபாரமாக ஆடியது மும்பை இந்தியன்ஸ். கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் முதல் பந்தில் சிக்சர் அடித்தார் பொல்லார்டு. ஆனால் அடுத்த பந்தில் அவுட்டானார். 4 பந்துகளில் 13 ரன்களை குவிக்க வேண்டிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

Story first published:  Sunday, October 21, 2012, 12:00 [IST]
English summary
Lasith Malinga's five-wicket haul and Dinesh Karthik's whirlwind 74 went in vain as Chennai Super Kings eked out a narrow six-run win over Mumbai Indians in an inconsequential Group B match of the Champions League Twenty20 on Saturday.
கருத்தை எழுதுங்கள்