Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக்: டைட்டன்ஸை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Posted by:
Published: Monday, October 22, 2012, 9:29 [IST]
 

சாம்பியன்ஸ் லீக்: டைட்டன்ஸை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் டைட்டன்ஸ் அணியை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டைட்டன்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் மற்றும் பிஸ்லா தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் ரன்குவிப்பில் அதிக வேகம் காட்டினர். பிஸ்லா 14 பந்தில் 27 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து இறங்கிய மெக்கல்லம் மெக்கல்லம் 20 பந்தில் 36 ரன் எடுத்து அவுட் ஆனார். கம்பீர் 36 பந்தில் 44 ரன் எடுத்து அவுட் ஆனார். 7-வது வீரராக வந்த தாஸ் 19 பந்தில் 43 ரன் குவித்ததால் கொல்கத்தா அணி 188 ரன் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய டைட்டன்ஸ் அணி, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தத்தளித்தது. டைட்டன்ஸ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தன. டைட்என்ஸ் அணியால் 16.4 ஓவரில் 89 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது..

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியைத் தழுவி வந்த கொல்கத்தா அணிக்கு இது ஒரு ஆறுதல் வெற்றியாகும்.

English summary
Kolkata Knight Riders produced a clinical performance in their concluding group league match as they comprehensively thrashed Titans by 99 runs in the Champions League Twenty20 here on Sunday.
கருத்தை எழுதுங்கள்