Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அகர்கர், சேவாக் புண்ணியத்தால் பெர்த்தை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

Posted by:
Published: Monday, October 22, 2012, 9:21 [IST]
 

அகர்கர், சேவாக் புண்ணியத்தால் பெர்த்தை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
 

ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பெர்த் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
.
நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பெர்த் அணியில் கிப்ஸ்- மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆனால் 6 ரன்களில் கிப்ஸ் அவுட்டாகினார். சற்று நிலைத்து ஆடிய காடிச்- மார்ஷ் 13 வது ஓவர் வரை தாக்குப் பிடித்தனர். ஆனால். டெல்லியின் அகர்கர் யாரையும் விடுவதில்லை என்ற பார்மில் பந்து வீசிக் கொண்டிருந்தார். அகர்கரின் பந்துவீச்சை பெர்த் அணி எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை 122 ரன்கள் என்பது எளிதான இலக்கு! ஆனால் பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி அணி மிகவும் அசால்ட்டாக விளையாட அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோயின. இதனால் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. 30 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. 16-வது ஓவர் அந்த அணிக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. இர்பான் பதான், சேவாக் அடுத்தடுத்து அவுட் ஆக ஆட்டம் திரில்லானது. நெருக்கடியில் இருந்த டெல்லி அணிக்கு பேட்டிங்கிலும் கைகொடுத்த அகர்கர் 9-வது நபராக களமிறங்கி 7 பந்தில் 11 ரன்கள் அடித்தார். இதனால் 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

English summary
Ajit Agarkar's all-round display backed by a composed half century from Virender Sehwag helped Delhi Daredevils beat Perth Scorchers by three wickets and move a step closer to a semi-final berth in the Champions League Twenty20 here on Sunday.
கருத்தை எழுதுங்கள்