Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இலங்கை டுவென்டி20 அணியின் கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் நியமனம்

Posted by:
Published: Friday, October 26, 2012, 11:17 [IST]
 

இலங்கை டுவென்டி20 அணியின் கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் நியமனம்
 

கொழும்பு: நியூசிலாந்திற்கு எதிரான டுவென்டி20 போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயவர்த்தனே, அஜந்தா மென்டிஸ், மலிங்கா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கைகு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அப்போது இலங்கைக்கு எதிரான 1 டுவென்டி20 போட்டி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி பங்கேற்க உள்ளது.

இதற்கான இலங்கை அணியின் வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இலங்கை வீரர் தேர்வுக்குழுவின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

இதில் வரும் 30ம் தேதி பல்லகலேயில் நடைபெற உள்ள டுவென்டி20 போட்டிக்கு கேப்டனாக இலங்கை ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக மற்றொரு ஆல் ரவுண்டர் குலசேகரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது. இதில் அதிருப்தி அடைந்த முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே, டுவென்டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்த விலகினார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆடி வரும் ஜெயவர்த்தனேக்கு, டுவென்டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல காயம் காரணமாக சுழல்பந்துவீச்சாளர் அஜந்தா மென்டிஸிற்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் நியூசிலாந்திற்கு எதிரான டுவென்டி20 போட்டி மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கமாட்டார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் மலிங்காவிற்கும் டுவென்டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடரில் ஆடிய இளம் சுழல்பந்துவீச்சாளர் தரந்து கவுசல், ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

English summary
Sri Lanka cricket selectors on Thursday opted to rest Mahela Jayawardene and Lasith Malinga for one-off Twenty20 International, scheduled to be held in Pallekele on October 30, against the touring New Zealand. Angelo Mathews has been named the skipper of Twenty20 team.
கருத்தை எழுதுங்கள்