Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுகிறார் சுனில் கவாஸ்கர்!

Posted by:
Published: Friday, October 26, 2012, 11:01 [IST]
 

பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுகிறார் சுனில் கவாஸ்கர்!
 

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) சார்பாக வழங்கப்படும் கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர். கடந்த 1970 முதல் 1987ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடிய இவர், மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இதில் 47 போட்டிகளில் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழி நடத்தி உள்ளார். சர்வதேச அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் இவர் தான். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரரும் இவர் தான்.

கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கவாஸ்கர், தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். தனது சிறப்பான ஆட்டத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, தற்போது மற்றொரு விருது கிடைக்க உள்ளது.

பிசிசிஐயின் சார்பாக வழங்கப்படும் உயர்ந்த விருது கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது. இந்த விருது பெற தகுதியான வீரரை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் கவாஸ்கருக்கு, அந்த விருதை அளிக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதுடன் கவாஸ்கருக்கு, ரூ.25 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்த 7 வீரர்களுக்கு சிறப்பு விருது அளித்து கவரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விஜய் மெர்சண்ட், வினு மங்காடு, டட்டு பாத்கர், விஜய் மஞ்சுரேக்கர், குலாம் அகமது, ஜெய்சிம்ஹா, திலீப் சர்தீசாய் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.15 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்படும். விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரித்துள்ளது.

English summary
Former India captain Sunil Gavaskar will receive Indian cricket board's Col.C.K.Nayudu Lifetime Achievement award, the Board of Control for Cricket in India (BCCI) announced on Thursday.
கருத்தை எழுதுங்கள்