Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இலங்கை சுற்றுப்பயணம்: நியூசிலாந்திற்கு பந்துவீச்சு பயிற்சியாளராக சுமிந்தா வாஸ் நியமனம்

Posted by:
Published: Saturday, October 27, 2012, 16:01 [IST]
 

இலங்கை சுற்றுப்பயணம்: நியூசிலாந்திற்கு பந்துவீச்சு பயிற்சியாளராக சுமிந்தா வாஸ் நியமனம்
 

பெங்களூர்: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் சுமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இலங்கை வீரர் சுமிந்தா வாஸ்(38). சர்வதேச அளவில் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்த வாஸ், 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 355 விக்கெட்களை எடுத்துள்ளார். 12 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 1 சதம் மற்றும் 13 அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுமிந்தா வாஸ், தற்போது நியூசிலாந்து அணியின் டெஸ்ட் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் வர உள்ள நியூசிலாந்து அணி, அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணிக்கு மட்டும் சுமிந்தா வாஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இதற்காக நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஷேன் பாண்ட் உடன் வாஸ் இணைந்து செயல்படுவார்.

இது குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹிஸ்சன் கூறியதாவது,

சர்வதேச அளவில் மிக சிறந்த பந்துவீச்சாளராக ஜொலித்தவர் சுமிந்தா வாஸ். எனவே அவரது அனுபவத்தை, இலங்கையில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு பயன்படுத்தி கொள்ள விரும்புகிறோம். வாஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்ள மைதானங்களின் நிலையை தெளிவாக அறிந்துள்ள வாஸ், நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக உதவுவார். முக்கியமாக இடதுபந்துவீச்சு குறித்து பல முக்கிய நுணுக்களை, அவர் மூலம் கற்று கொள்ள முடியும் என்றார்.

இது குறித்து சுமிந்தா வாஸ் கூறியதாவது,

ஒரு சர்வதேச அணியுடன் இணைந்து செயலாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இதிலும் நியூசிலாந்து போன்ற அணியில் பல திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சொந்த மண்ணில் எனக்கு உள்ள அனுபவம் மூலம் நியூசிலாந்து அணி பெரும் பயன் அடையலாம் என்று நம்புகிறேன் என்றார்.

English summary
Former Sri Lanka left-arm paceman Chaminda Vaas will be New Zealand's bowling coach during their tour to Sri Lanka, New Zealand Cricket (NZC) announced on Saturday.
கருத்தை எழுதுங்கள்