Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது சரி: கோஹ்லி

Posted by:
Published: Sunday, October 28, 2012, 11:16 [IST]
 

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது சரி: கோஹ்லி
 

டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படாமல் இருப்பதை இந்தியாவின் விராத் கோஹ்லி நியாயப்படுத்தி உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் நவம்பர் மாதம் 15-ந்தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்குகிறது.

வரும் அக்டோபர் 30-ந்தேதி முதல் 3 நாட்கள் மும்பையில் பயிற்சி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் அனுபவம் பெற்று விடக்கூடாது என்பதற்காக இந்திய அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரும் சேர்க்கப்படவில்லை.

இதை நியாயப்படுத்தும் வகையில் இந்திய அணியின் விராத் கோஹ்லி கூறுகையில்,

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயிற்சி ஆட்டங்களில் நமக்கு சாதகமான ஆடுகளங்கள் வழங்கப்பட்டன. ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு வேகப்பந்து எடுபடும் வகையில் ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் நேர்மையுடன் இருக்க விரும்பியிருந்தால், டெஸ்ட் போட்டிக்கு எந்த மாதிரியான ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதோ அதே போன்ற ஆடுகளத்தை பயிற்சி போட்டிக்கும் தந்திருக்க வேண்டும்.

வெளிநாட்டு அணிகளுக்கு பயிற்சிக்கு குறைந்த காலமே இருக்கும் என்பதை அறிந்தும், அவர்கள் வெவ்வேறு ஆடுகளங்களை தந்தனர். இப்போது இங்கிலாந்து வீரர்கள் இந்திய மண்ணில் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் விளையாட வேண்டி உள்ளது. தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

English summary
Prolific Indian middle order batsman Virat Kohli reckons that it will be absolutely fair if India take advantage of home conditions and make the visiting English side play on rank turners during their upcoming tour.
கருத்தை எழுதுங்கள்