Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி: சிட்னி சிக்சர்ஸ் சாம்பியனாகுமா?

Posted by:
Published: Sunday, October 28, 2012, 10:19 [IST]
 

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்  இறுதிப் போட்டி: சிட்னி சிக்சர்ஸ் சாம்பியனாகுமா?
 

ஜோகனஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் சிட்னி மற்றும் லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 4-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இன்றுதான் இறுதிப் போட்டி! 10 அணிகள் பங்கேற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 6 அணிகள் பரிதாபத்துடன் வெளியேறின!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிட்னி சிக்சர்சும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லயன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று இரவு இந்திய நேரப்படி 9 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

சிட்னி சிக்சர்ஸ்

பொதுவாக சிட்னி சிக்சர்ஸ் அணியே வெற்றி பெறக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. நடப்புத் தொடரில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணியாகத் திகழ்வது சிட்னி சிக்சர்ஸ்தான்! மைக்கேல் லம்ப், கேப்டன் ஹேடின், ஸ்டீவன் சுமித், ஸ்டீவ் ஓ கீபே, ஹென்ரிகஸ் ஆகியோர் அற்புத பங்களிப்பின் பயன் இது!

கேப்டன் ஹேடின் பெருவிரலில் காயமடைந்திருந்ததால் இறுதி ஆட்டத்தில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் ஸ்கேன் பரிசோதனையில் காயம் பெரிதாக இல்லை என்பது தெரியவந்ததால், அவர் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

லயன்ஸ் அணி

தென்னாப்பிரிக்காவின் லயன்ஸ் அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவு இருக்கிறது. நடப்பு சாம்பியன்ஸ் லீக்கில் அதிக ரன்கள் குவித்த இரு பேட்ஸ்மேன்களான குலாம்போடி, நீல் மெக்கன்சி இருவரும் லயன்ஸ் அணியில் தான் இருக்கின்றனர்! இவர்களுடன் பந்து வீச்சாளர் ஆரோன் பான்கிசோ செம பலம்!

லீக்கில் இரு அணிகளும் சந்தித்த போது 138 ரன்கள் இலக்குடன் ஆடிய சிட்னி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி லயன்சை வீழ்த்தியிருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க லயன்ஸ் வரிந்து கட்டி நிற்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கலாம்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.131/2 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி சுமார் ரூ.7 கோடி பரிசாக பெறும்.

English summary
Sydney Sixers, invincible so far in the competition, will be the firm favourite for the title, but South Africa’s enterprising Highveld Lions would look to upset the Australian powerhouse when the two sides clash in the Champions League Twenty20 final here on Sunday.
கருத்தை எழுதுங்கள்