Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கெவின் பீட்டர்சன் கொண்ட இங்கிலாந்து அணி இந்தியா வந்து சேர்ந்தது-நாளை முதல் பயிற்சி ஆட்டம்

Posted by:
Published: Monday, October 29, 2012, 16:35 [IST]
 

கெவின் பீட்டர்சன் கொண்ட இங்கிலாந்து அணி இந்தியா வந்து சேர்ந்தது-நாளை முதல் பயிற்சி ஆட்டம்
 

மும்பை: அதிரடி துவக்க வீரர் கெவின் பீட்டர்சனை கொண்ட இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அடுத்த மாதம் துவங்க உள்ள இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் இங்கிலாந்து அணி, இன்று அதிகாலையில் இந்தியா வந்து சேர்ந்தது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளார்.

இதற்கு முன்பாக இங்கிலாந்து அணி 3 பயிற்சி போட்டிகளில் ஆட உள்ளது. இதில் இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டி நாளை மும்பையில் துவங்க உள்ளது. 3 நாட்கள் கொண்ட இந்த போட்டிக்கு, இந்தியா 'ஏ' அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்னாக செயல்பட உள்ளார்.

அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் கெவின் பீட்டர்சன் இடம் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இவர் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15ம் தேதி அஹமதாபாத்தில் துவங்க உள்ளது. டெஸ்ட் தொடருக்கு பிறகு டிசம்பர் மாதம் 20 மற்றும் 22ம் தேதிகளில் 2 டுவென்டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்பிறகு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட நாடு திரும்பும் இங்கிலாந்து அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரில் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. இந்த நிலையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

English summary
The England team led by Alastair Cook, along with the support staff, arrived here early this morning from Dubai for a series of four Test matches and two T20 Internationals against hosts India.
கருத்தை எழுதுங்கள்