Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

நாம் அனுபவித்த தோல்வியின் வலியை இங்கிலாந்தும் உணர வேண்டும்: ரெய்னா

Posted by:
Published: Tuesday, October 30, 2012, 12:44 [IST]
 

நாம் அனுபவித்த தோல்வியின் வலியை இங்கிலாந்தும் உணர வேண்டும்: ரெய்னா
 

மும்பை: கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை முழுமையாக இழுந்த போது நாங்கள் அனுபவித்த வலியை, இங்கிலாந்து அணி தற்போது உணர வேண்டும் என்று இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று ஆடி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த போது பெற்ற வலியை, அந்த அணியும் உணர வேண்டும் என்று இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று போது நானும் இந்திய அணியில் இருந்தேன். அங்கு 0-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்த போது இந்திய அணிக்கு ஏற்பட்ட வலியை நானும் உணர்ந்தேன்.

டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் எஸ்.ஜி மற்றும் டியூக் ஆகிய இரு வகை பந்துகளுக்கும் இடையே அதிக வித்தியாசம் உண்டு. இந்திய அணியில் உள்ள ஜாகிர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு, எஸ்.ஜி டெஸ்ட் பந்துகளை பயன்படுத்தி, ரிவர்ஸ் சிவீங் வீச தெரியும்.

மேலும் அஸ்வினும், பிரக்யன் ஓஜா ஆகியோர் சுழல்பந்துவீசில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியை பொறுத்த வரை பந்துவீச்சாளர்களான ஸ்டீவ் பின், ஸ்டூவர்ட் போர்டு, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர், எஸ்.ஜி பந்துகளை எப்படி பயன்படுத்த உள்ளார்கள் என்பதை பொறுத்தே நமது வெற்றி தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டார்சஸ் ஓய்வு பெற்றது பெரிய இழப்பாக இருந்தாலும், பார்மில் உள்ள கெவின் பீட்டர்சன் அணிக்கு திரும்பி இருப்பது பக்கபலம்.

நோயின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள யுவராஜ் சிங், தற்போது இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். அவர் எனக்கும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த மாதிரியாக உள்ளார். டெஸ்ட் அணியில் அவரை மீண்டும் பார்க்க நான் விரும்புகிறேன்.

அதே நேரத்தில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவும் விரும்புகிறேன். ஆனால் இந்திய அணியில் 6வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. அது அணி தேர்வு குழுவின் முடிவை பொருத்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டிகளில் நான் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தால் மட்டுமே, இந்திய அணியில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும் என்றார்.

English summary
After a 4-0 thrashing at the hands of England last year in their backyard, it will be payback time when India take on the English side in the four-Test series starting at Ahmedabad next month, said middle-order batsman Suresh Raina.
கருத்தை எழுதுங்கள்