Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆசிய கோப்பை: வருண பகவான் கருணையில் இந்திய பெண்கள் பைனலுக்கு தகுதி

Posted by:
Published: Tuesday, October 30, 2012, 17:04 [IST]
 

ஆசிய கோப்பை: வருண பகவான் கருணையில் இந்திய பெண்கள் பைனலுக்கு தகுதி
 

கான்கவுவ்: ஆசிய கோப்பைக்கான பெண்கள் டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் லீக் போட்டிகளில் முன்னிலை வகித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆசிய கோப்பைக்கான பெண்கள் அணிகள் கலந்து கொள்ளும் டுவென்டி20 கிரிக்கெட் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. ஒரு போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின.

இந்த நிலையில் கங்கவுவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் லீக் போட்டிகளில் இந்திய பெண்கள் அணி, முன்னிலை வகித்ததை கணக்கில் கொண்டு, தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பாகிஸ்தானுடன் மோதல்:

இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மைதலி ராஜ் மற்றும் மூத்த வேகப்பந்துவீச்சாளர் குலாம் கோஸ்வாமி ஆகியோர் காயம் காரணமாக விளையாட போவதில்லை. முன்னதாக லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Despite rain washing out the semi-final clash between India and Sri Lanka here on Tuesday, Indian eves advanced to the ACC Women's Twenty20 Asia Cup final by the virtue of topping their pool.
கருத்தை எழுதுங்கள்