Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ' அபார ஆட்டம்: மனோஜ் திவாரி-யுவராஜ் சிங் அரைசதம்

Posted by:
Published: Tuesday, October 30, 2012, 18:01 [IST]
 

பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ'  அபார ஆட்டம்: மனோஜ் திவாரி-யுவராஜ் சிங் அரைசதம்
 

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய 'ஏ' அணிக்கு 9 விக்கெட்களை இழந்து 369 ரன்களை குவித்துள்ளது. இந்திய வீரர்களான மனோஜ் திவாரி 93 ரன்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். யுவராஜ் சிங், அபினவ் முகுந்த் ஆகியோர் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக 3 பயிற்சி போட்டிகளில் ஆட உள்ளது. இதில் இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டி இன்று துவங்கியது.

3 நாட்கள் கொண்ட முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய ஏ அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் முரளி விஜய் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரஹானே 4 ரன்களில் ஏமாற்றினார்.

அதன்பிறகு துவக்க வீரர் முகுந்த், யுவராஜ் சிங் உடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய முகுந்த் அரைசதம் கடந்தார். 16 பவுண்டரிகள் அடித்த அவர் 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய யுவராஜ் சிங் அரைசதம் கடந்தார். 4 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடித்த யுவராஜ் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேப்டன் சுரேஷ் ரெய்னா சற்றுநேரம் ஆடி 20 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்த இளம்வீரர் மனோஜ் திவாரி பொறுமையாக ஆடி அரைசதம் கடந்தார். அவருக்கு சற்றுநேரம் ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சாகா 20 ரன்களில் எல்பிடபில்யூ ஆனார். அதன்பிறகு இர்பான் பதான் சிறப்பாக ஆடினார்.

12 பவுண்டரிகளுடன் சதத்தை நெருங்கிய மனோஜ் திவாரி 93 ரன்கள் எடுத்து போல்டானார். இர்பான் பதான் 46 ரன்கள் எடுத்து எல்பிடபில்யூ ஆனார். கடைசி கட்டத்தில் வினய்குமார், அவானா ஜோடி மேலும் விக்கெட்கள் போகாமல் பார்த்து கொண்டது.

இதன்மூலம் முதல் பயிற்சி போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி 9 விக்கெட்களை இழந்து 369 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியின் டீம் பிரிஸ்னேன், கிரேம் சுவான் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

English summary
Manoj Tiwary missed out on a century as he fell for 93 but took India A score 369 on the opening day of their three-day warm-up game against England at the Brabourne Stadium here on Tuesday.
கருத்தை எழுதுங்கள்