Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்திய அணி இன்னும் பலவீனமாக தான் உள்ளது: சொல்கிறார் கவாஸ்கர்

Posted by:
Published: Wednesday, October 31, 2012, 18:16 [IST]
 

இந்திய அணி இன்னும் பலவீனமாக தான் உள்ளது: சொல்கிறார் கவாஸ்கர்
 

மும்பை: வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்ற போது இந்திய அணி இருந்த பலவீன நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2 டுவென்டி20 போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக தற்போது இந்திய ஏ அணியுடனான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

சொந்த மண்ணில் களமிறங்க உள்ள இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, இந்திய அணி எப்படி பலவீனமாக இருந்தோ, அதே நிலையிலேயே தற்போதும் நீடிப்பதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேட்டியில் ஒன்றில் கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இந்திய அணி எப்படி பலவீனமாக இருந்ததோ, அதே நிலவரத்தில் தற்போதும் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த சுற்றுப்பயணங்களின் போது மேற்கண்ட இரு அணிகளும் பலவீனமாக இருந்தன. இருப்பினும் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது.

தற்போது இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரியான பார்மில் இல்லை. மேலும் வேகப்பந்துவீசிலும் மந்தமாக செயல்பாட்டை தான் காண முடிகிறது. விராத் கோஹ்லி மட்டுமே 3வது வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வருகிறார்.

அஸ்வினின் சுழல்பந்துவீ்ச்சில் இந்திய அணிக்கு நம்பிக்கை உள்ளது. அஸ்வின் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறார். ஓஜாவும் பந்துவீச்சில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தடுமாறலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது என்றார்.

English summary
Former India skipper Sunil Gavaskar aware of Team India's weaknesses ahead of the Test series against England, feels MS Dhoni's men are vulnerable and fears yet another debacle.
கருத்தை எழுதுங்கள்