Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி போட்டி 'டிரா': 5 விக்கெட் வீழ்த்தினார் யுவராஜ் சிங்

Posted by:
Published: Friday, November 2, 2012, 10:16 [IST]
 

இங்கிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி போட்டி 'டிரா': 5 விக்கெட் வீழ்த்தினார் யுவராஜ் சிங்
 

மும்பை: இங்கிலாந்து, இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது. இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முயன்று வரும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், பேட்டிங்கில் அரைசதமும், சிறப்பான பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி, இங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக 3 பயிற்சி போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் முதல் பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணியுடன் மோதியது.

இந்தியா ஏ, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட முதல் பயிற்சி போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி 426 ரன்கள் எடுத்தது. புற்றுநோயில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், தற்போது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முயன்று வருகிறார். இதற்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இந்தியா ஏ அணியில் அவர் சேர்க்கப்பட்டு, ஆடினார். பேட்டிங்கில் சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து தனது பார்மை நிரூபித்தார். அதேபோல தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 94 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்திய யுவராஜ் சிங், தனது பந்துவீச்சு பார்மை நிரூபித்துள்ளார்.

அதன்பிறகு போட்டியின் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி, போட்டியின் 3ம் நாள்(கடைசி நாள்) முடிவில் 40 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. துவக்க வீரர் அபினவ் முகுந்த்(3), முரளி விஜய்(32), யுவராஜ் சிங்(14) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ரஹானே(54) அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

இறுதியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா(19), மனோஜ் திவாரி(2) ஜோடி அவுட்டாகாமல் களத்தில் இருந்தது. இங்கிலாந்து அணி தனது 2வது பயிற்சி போட்டியில் மும்பை ஏ அணியை நவி மும்பை மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது இப்போட்டி நாளை துவங்க உள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 15ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Comeback man Yuvraj Singh excelled with his maiden five-wicket haul in first class cricket as Englands warm-up game against India A ended in a tame draw at the Brabourne Stadium on Thursday.
கருத்தை எழுதுங்கள்