Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது?-போட்டி அட்டவணை வெளியீடு

Posted by:
Published: Friday, November 2, 2012, 13:20 [IST]
 

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது?-போட்டி அட்டவணை வெளியீடு
 

மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்தது. மேலும் பாகிஸ்தானில் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதால், மற்ற நாட்டு அணிகளும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கின.

இதனால் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. பல நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களில் மட்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு இரு நாட்டு அரசுகளும் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் தொடரை நடத்த முடிவானது.

ஆனால் இந்திய அணி தொடர்ந்து பல கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளதால், பாகிஸ்தான் அணியுடனான தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட நாடு திரும்பும் போது, பாகிஸ்தான்-இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது இதற்கான போட்டி அட்டவணையை, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையே 2 டுவென்டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கான அட்டவணை:

டிசம்பர் 25 - முதல் டுவென்டி20 போட்டி - பெங்களூரு

டிசம்பர் 27 - 2வது டுவென்டி20 போட்டி - அகமதாபாத்

டிசம்பர் 30 - முதல் ஒருநாள் போட்டி - சென்னை

ஜனவரி 3 - 2வது ஒருநாள் போட்டி - கொல்கத்தா

ஜனவரி 6 - 3வது ஒருநாள் போட்டி - டெல்லி

இரு அணிகளுக்கு இடையிலான 2 டுவென்டி20 போட்டிகளும் இரவு 7 மணிக்கு துவங்கும். அதேபோல 3 ஒருநாள் போட்டிகளும் மதியம் 2.30 மணிக்கு துவங்கி, பகல்-இரவு போட்டியாக நடைபெறும். கடந்த 2007ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India and Pakistan will resume bilateral cricket ties with a Twenty20 international in Bangalore on Christmas Day, the Board of Control for Cricket in India (BCCI) said.
கருத்தை எழுதுங்கள்