Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஐபிஎல் 6: ஹைதராபாத் அணியில் கங்குலியை சேர்க்க சன் டிவி குழுமம் விருப்பம்

Posted by:
Updated: Friday, November 2, 2012, 15:51 [IST]
 

<ல்><ள்ற்ழ்ர்ய்ஞ்>{ண்ம்ஹஞ்ங்-02-02-த்ர்ட்ய்ஜ்ழ்ண்ஞ்ட்ற்-ஞ்ஹய்ஞ்ன்ப்ஹ்-300.த்ல்ஞ் ற்ஹம்ண்ப்.ற்ட்ஹற்ள்ஸ்ரீழ்ண்ஸ்ரீந்ங்ற்.ஸ்ரீர்ம்-

மும்பை: 6 வது ஐபிஎல் தொடருக்கான அணிகள் தேர்வில் ஹைதராபாத் அணியில் முன்னாள் இந்திய கேப்டனும், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றவருமான கங்குலியை சேர்க்க சன் டிவி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட, முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜான் ரைட் மீது ஆர்வம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<ல்>இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமானது ஐபிஎல். ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பதிலாக ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட அணியை, சன் டிவி குழுமம் வாங்கி உள்ளது.

<ல்>இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான அணிகளின் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக அணி நிர்வாகங்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றன. இதில் சன் டிவி குழுமம் வாங்கியுள்ள ஹைதராபாத் அணியில் தற்போது உள்ள 20 வீரர்களும் தொடர்ந்து நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<ல்>மேலும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியை சேர்க்க, சன் டிவி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்த கங்குலி, அதன்பிறகு புனே வாரியரிஸ் அணிக்காக ஆடினார். ஆனால் இந்த ஆண்டு புனே வாரியரிஸ் அணி, ஐபிஎல் தொடரில் படுதோல்வி அடைந்ததால், கங்குலி அணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

<ல்>இதனால் கங்குலி தானாக முன்வந்து, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, புனே வாரியர்ஸ் அணியும் கங்குலியை ஒப்பந்தத்தில் இருந்து விடுத்தது.

<ல்>இந்த நிலையில் சன் டிவி குழுமம் சார்பாக ஹைதராபாத் அணியில் கங்குலியை சேர்க்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜான் ரைட், அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்று சன் டிவி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.

<ல்>இதனால் கங்குலி மீண்டும் கிரிக்கெட் ஆடுகளத்தில் வீரராக களமிறங்க முடிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

<ல்>இது குறித்து கங்குலியிடம் கேட்டதற்கு, அடுத்தப்படியாக என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முதலில் கண்டத்தை(வீரர்கள் தேர்வு) கடந்த பிறகு தான் எதையும் உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

<ல்>அனுபவ வீரரான கங்குலியை ஆடுகளத்தில் கொண்டு, அனுபவ பயிற்சியாளர் ஜான் ரைட்டின் பயி்ற்சியை பெற்றால், சன் டிவி குழுமத்தின் கையில் உள்ள ஹைதராபாத் அணி புது பொலிவு என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published:  Friday, November 2, 2012, 15:23 [IST]
English summary
After announcing his retirement from cricket, Sourav Ganguly has been approached by Team Hyderabad, bought by Sun TV group for the sixth edition of Indian Premier League, according to reports.
கருத்தை எழுதுங்கள்