Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அடேங்கப்பா... ரஞ்சி கோப்பைப் போட்டியில் சச்சின் 103 பந்துகளில் சதம்-கவாஸ்கர் சாதனையை நெருங்குகிறார்

Posted by:
Updated: Friday, November 2, 2012, 18:16 [IST]
 

மும்பை: ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கியுள்ள இந்திய பேட்ஸ்மேன் சச்சின், அதிரடியாக ஆடி 103 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கரின் சாதனையை சச்சின் நெருங்கியுள்ளார்.

அடேங்கப்பா... ரஞ்சி கோப்பைப் போட்டியில் சச்சின் 103 பந்துகளில் சதம்-கவாஸ்கர் சாதனையை நெருங்குகிறார்
ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. இதில் மும்பையில் உள்ள வான்கிடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை, ரயில்வே அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியில் துவக்க வீரராக களமிறங்கிய சச்சின், துவக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்தார். பொறுமையாக ஆடி அரைசதம் கடந்த சச்சின் 95 பந்துகளில் 74 ரன்களை எட்டினார். அதன்பிறகு அதிரடிக்கு தாவினார்.

ரயில்வே அணியினர் வீசிய பந்துகளை நாலாபுறமும் அடித்து விளாசிய சச்சின், அடுத்து சந்தித்த 8 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் முதல்தர போட்டிகளில் தனது 79வது சதத்தை சச்சின் பூர்த்தி செய்தார். இதில் 3 சிக்ஸ் மற்றும் 14 பவுண்டரிகள் உட்படும். மும்பை அணிக்காக ஆடியுள்ள சச்சின், இதுவரை 18 சதம் அடித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் 81 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கரின் சாதனையை நெருங்கியுள்ள சச்சின், விரைவில் அதை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் சமீபகாலமாக சச்சின் சொற்ப ரன்களில் அவுட்டானாதால், அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் சச்சின் தனது பேட்டிங் பார்மை மீட்டுள்ளார். இதன்மூலம் வரும் 15ம் தேதி துவங்க உள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட தான் தயாராக இருப்பதை சச்சின் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published:  Friday, November 2, 2012, 17:05 [IST]
English summary
Sachin Tendulkar scored a century playing for Mumbai against Railways on the opening day of the Ranji Trophy here at the Wankhede Stadium on Friday. Tendulkar got to his 100 off 103 balls with 14 fours and three sixes. He moved from 74 to 100 in just eight balls as he toyed with the bowling attack.
கருத்தை எழுதுங்கள்