Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டுவென்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேனா?-ஷேவாக் மறுப்பு

Posted by:
Published: Friday, November 2, 2012, 15:14 [IST]
 

டுவென்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேனா?-ஷேவாக் மறுப்பு
 

டெல்லி: சர்வதேச அளவிலான டுவென்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று இந்திய அணியின் துவக்க வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக களமிறங்குபவர் ஷேவாக்(34). இவர் சமீப காலமாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷேவாக் 3 போட்டிகளில் ஆடி 54 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில் 'மெயில் டுடே' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வெளியான அந்த செய்தியில் கூறியிருந்ததாவது,

சர்வதேச அளவிலான டுவென்டி20 போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்று ஷேவாக், கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சர்வதேச அளவிலான டுவென்டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த போவதாகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆட உள்ளதாகவும் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

டுவென்டி20 போட்டிகளில் விரைவாக ரன் சேர்க்க தேவையான உடற்தகுதி இல்லாததால், ஷேவாக் விரைவில் ஓய்வு பெற தீர்மானித்ததாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தனது ஓய்வு குறித்து வெளியான செய்தியை மறுத்துள்ள ஷேவாக், அதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷேவாக், டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,

நான் பிசிசிஐயை சேர்ந்த எந்த அதிகாரிகளிடம் சந்தித்து பேசவில்லை. ஓய்வு பெறுவதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
India's dashing opener Virender Sehwag has denied reports about his T20 retirement and termed it as a 'baseless story'.
கருத்தை எழுதுங்கள்