Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'

Posted by:
Published: Friday, November 2, 2012, 11:55 [IST]
 

ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'
 

குவங்சவ்: ஆசிய கோப்பைக்கான பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய வீராங்கனைகள் கோப்பையை கைப்பற்றினர்.

ஆசிய கோப்பைக்கான டுவென்டி20 பெண்கள் கிரிக்கெட் தொடரில் சீனாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. உலக கோப்பை தொடரில் கோட்டைவிட்ட இந்திய அணி, ஆசிய கோப்பையாவது கைப்பற்றி ஆறுதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. புனம் ரவுத்(25), ஹர்மன்பிரீத் குர்(20), ரிமா மல்ஹோத்ரா(18) ஆகியோர் மட்டுமே பொறுப்பாக ஆடினர். மற்றவர்கள் வந்த வேகத்தில் அவுட்டாகினர்.

இந்திய வீராங்கனைகளில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இந்திய இன்னிங்ஸில் புனம் ரவுத் அடித்த 3 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. வேறு யாரும் பவுண்டரி கூட அடிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் சானா மிர் சிறப்பாக பந்துவீசி 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

82 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள், ரன் சேர்க்க தடுமாறினர். 19.1 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் அணி, 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிஸ்மா மட்டுமே 18 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தார். இதன்மூலம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

English summary
Indian women defeated Pakistan women by 18 runs to win the Asia Cup Twenty20 title. India successfully defended a low score of 81 at the Guanggong International Cricket Stadium.
கருத்தை எழுதுங்கள்