Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: வீரேந்திர சேவாக்குக்கு கையில் காயம்

Posted by:
Published: Sunday, November 4, 2012, 13:54 [IST]
 

ரஞ்சி  கோப்பை கிரிக்கெட்: வீரேந்திர சேவாக்குக்கு கையில் காயம்
 

காசியாபாத்: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரேந்திர சேவாக்குக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 15-ந் தேதி தொடங்க உள்ளது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை போட்டியில் வீரேந்திர சேவாக் ஆடி வருகிறார்.

டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் நேற்றைய ஆட்டத்தின் போது முகமது கைப் அடித்த பந்தை பிடிக்க முயன்றார் சேவாக். ஆனால் பந்து சேவாக்கின் மோதிர விரலைத் தாக்கியது. இதனால் பெவிலியனுக்கு திரும்பிவிட்டார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு கையில் பேன்டேஜ் போட்டபடி விளையாடினார்.

இருப்பினும் சேவாக்குக்கு சிறிய அளவிலான காயம்தான் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே சொதப்பலான ஆட்டத்தால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் சேவாக்குக்கு கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவரது பார்ம் கேள்விக்குளாகலாம்.

English summary
Virender Sehwag sustained an injury on the ring finger of his right hand during Delhi's Ranji Trophy game against Uttar Pradesh here on Saturday.
கருத்தை எழுதுங்கள்