Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: யுவராஜூக்கு இடம் கிடைக்குமா?

Posted by:
Published: Sunday, November 4, 2012, 13:59 [IST]
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: யுவராஜூக்கு இடம் கிடைக்குமா?
 

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த அணியில் யுவராஜ்சிங்கும் இடம்பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ்சிங், 20 ஓவர் உலகக் கோப்பையில் இடம்பிடித்து தமது திறமையை வெளிப்படுத்தினார். துலிப் டிராபி போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் யுவராஜ்சிங் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் அரை சதமும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் 15-ந் தேதி அகமதாபாத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அணி தேர்வு நாளை நடைபெறுகிறது. நல்ல உடல் தகுதியுடன் இருக்கக் கூடிய யுவராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதுதான் பலரது ஆர்வம். யுவராஜ்சிங் தேர்வானால் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் இடம்பிடிப்பார்.

நாளை 'யுவி'க்கு எப்படியான நாளோ?

English summary
Yuvraj Singh is all set to regain his spot in the Indian Test squad when the new national selection panel, headed by Sandeep Patil, sits down tomorrow to pick the team for the series-opener against England at Ahmedabad from November 15-19.
கருத்தை எழுதுங்கள்