Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெஸ்ட் அணியிலிருந்து கல்தா.. சோகத்தில் சோறு சாப்பிட மறுத்த ரெய்னா!

Posted by:
Published: Tuesday, November 6, 2012, 15:35 [IST]
 

டெஸ்ட் அணியிலிருந்து கல்தா.. சோகத்தில் சோறு சாப்பிட மறுத்த ரெய்னா!
 

டெல்லி: டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் செம கடுப்பாகிப் போன சுரேஷ் ரெய்னா, மத்தியா சாப்பாட்டைப் புறக்கணித்து விட்டாராம்.

உ.பி. ரஞ்சி அணியின் கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னா காஸியாபாத்தில் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆடி வந்தார். நேற்று ஆட்டத்தின் இறுதி நாள். நேற்றுதான் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரெய்னாவுக்கு இடம் தரப்படவில்லை.

இந்த செய்தி வந்து சேர்ந்ததும் அப்செட்டாகி விட்டாரம் ரெய்னா. இதனால் நேற்று மத்தியானச் சாப்பாட்டுக்கு அவர் போகவில்லை. அறைக்குள்ளேயே இருந்தாராம். அதேபோல நேற்று மாலை நடந்த ஆட்ட நாயகன் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் ரெய்னா பெரும் சோகத்தில் இருப்பதாகவும், அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் உ.பி. வீரர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரெய்னா நீக்கம் குறித்து உ.பி அணியின் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், இது நியாயமற்றது. ரெய்னா சிறந்த வீரர். அவரது நீக்கம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக ஆடியிருக்கிறார். முக்கிய கட்டத்தில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அவரைச் சேர்த்திருக்கலாம் என்றார்.

English summary
Uttar Pradesh captain Suresh Raina was so hurt after learning about his ouster from the Test squad, that he decided to skip lunch on the final day of his team's Ranji Trophy game against Delhi, prompting his state team coach Venkatesh Prasad to term it as "unfortunate."
கருத்தை எழுதுங்கள்