Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சட்டேஸ்வர் பூஜாராவுக்குக் கல்யாணம்

Posted by:
Published: Thursday, November 8, 2012, 12:47 [IST]
 

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் வீரர் சட்டேஸ்வர் பூஜாராவுக்கும், பூஜா பபாரிக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் ராஜ்கோட்டில் நடைபெற்றது.

சட்டேஸ்வர் பூஜாராவுக்குக் கல்யாணம்

இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் கிரிக்கெட் உலகிலிருந்து சவுராஷ்டிரா கிரிக்கெட் அணி கேப்டன் ஜெயதேவ் ஷா மட்டும் கலந்து கொண்டார். மற்றபடி குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.

ஹோட்டலில் வைத்து நடந்த இந்த வைபவம் குறித்து பூஜாராவின் தந்தை அரவிந்த் கூறுகையில், இதை தனிப்பட்ட நிகழ்ச்சியாக வைத்ததால் பெரிய அளவில் யாரையும் அழைக்கவில்லை என்றார்.

இது பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணமாம். பூஜாரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளதால், இப்போதைக்குத் திருமணம் இருக்காதாம். இங்கிலாந்துத் தொடர் முடிந்த பின்னர்தான் தேதியை முடிவு செய்யவுள்ளனராம்.

English summary
India batsman Cheteshwar Pujara got engaged to Pooja Pabari on Tuesday in Rajkot. The engagement ceremony was attended by family members and Saurashtra captain Jaydev Shah, the only cricketer to be present, a report in Ahmedabad Mirror newspaper said.
கருத்தை எழுதுங்கள்