Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மகளுக்கு உடம்பு சரியில்லை.. இங்கிலாந்துக்குப் பறந்து சென்றார் ஸ்வான்

Posted by:
Published: Thursday, November 8, 2012, 12:21 [IST]
 

மகளுக்கு உடம்பு சரியில்லை.. இங்கிலாந்துக்குப் பறந்து சென்றார் ஸ்வான்
 

சண்டிகர்: இங்கிலாந்து பபந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் தனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவருடன் இருப்பதற்காக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் ஹரியானா அணிக்கு எதிரான இறுதி பயிற்சிப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது பயிற்சிப் போட்டியில் ஆடி வருகிறது. இன்று ஹரியானா அணிக்கு எதிரான இறுதிப் பயிற்சிப் போட்டியில் அது ஆடுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஸ்வானின் மகளுக்கு உடல் நலம் சரியில்லை என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார். தனது மகளுடன் இருக்க அவர் விரும்பியதால் அவர் தாயகம் திரும்ப அணி நிர்வாகம் அனுமதித்தது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காகவும், தனது மகளைப் பார்த்துக் கொள்வதற்காகவும் ஸ்வான் இங்கிலாந்து திரும்பியுள்ளார். அகமதாபாத்தில் நவம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்டீவ் பின், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இங்கிலாந்து அணி சிரமத்தில் உள்ளது. இந்த நிலையில் ஸ்வானும் இங்கிலாந்து திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு இக்கட்டு அதிகரித்துள்ளது.

பின்னுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. பிராடுக்கு கையில் காயம். இருவரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவார்களா என்பதும் சந்தேகமாக உள்ளது.

இதனால் இங்கிலாந்து அணி ஸ்டூவர்ட் பிராட், பின், ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய முக்கிய பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில் இன்று ஹரியானாவை சந்திக்கிறது இங்கிலாந்து.

English summary
England's Graeme Swann has returned home to be with his family and sick daughter, ahead of the team's final practice match against Haryana on Thursday.
கருத்தை எழுதுங்கள்