Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஜார்கண்ட் டூ கிரிக்கெட் கேப்டன்: புளூம்பெர்க் டிவியில் கேப்டன் டோனியின் பேட்டி

Posted by:
Published: Friday, November 9, 2012, 10:21 [IST]
 

ஜார்கண்ட் டூ கிரிக்கெட் கேப்டன்: புளூம்பெர்க் டிவியில் கேப்டன் டோனியின் பேட்டி
 

ப்ளூம் பெர்க் டிவியின் ‘ஆன் இந்தியாஸ் ப்ரைம் ஐகான்' நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனியின் பேட்டி ஒளிபரப்பாகிறது. இன்றும் நாளையும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த பேட்டியில் கிரிக்கெட், பொழுதுபோக்கு, பெர்சனல் பற்றி மனம் திறந்து பேசியுள்ளாராம்.

அமெரிக்காவின் புளூம்பெர்க் டிவியில் இந்திய பிரபலங்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகின்றனர். இந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் மகேந்திரசிங் டோனியின் பேட்டி ஒளிபரப்பாகிறது.

ஜார்கண்டில் தொடங்கிய வாழ்க்கை இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அந்தஸ்திற்கு உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே டைம் இதழ் வரிசைப்படுத்திய உலக அளவில் உள்ள 100 பிரபலங்களில் டோனியின் பெயரும் இடம் பெற்றது.

உலகக்கோப்பை, 20 டிவென்டி வெற்றி, ஐபிஎல் கப் என வரிசையாக ஜெயித்தாலும் அலட்டல் இல்லாத கேப்டன்தான் டோனி. அதேபோல் வரிசையாக தோற்றாலும் சரி, இன்னிங்ஸ் தோல்வியே ஆனாலும் சரி கூலாக எதிர்கொள்வார் அதுதான் டோனியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

தன்னுடைய வெற்றியின் ரகசியங்களையும், பெர்சனல் ரகசியங்களையும் புளூம்பெர்க் டிவியின் ‘இந்தியாஸ் ப்ரைம் ஐகான்' நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார். இன்றும் நாளையும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

Read more about: dhoni, டோனி
English summary
On India’s Prime Icon this week watch Mahendra Singh Dhoni. The Captain of the Indian Cricket teem who hails from Jarkhand had humble beginnings.
கருத்தை எழுதுங்கள்