Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஹர்பஜன்சிங்குக்கு என்னாச்சு? முதல் நாள் பயிற்சி முகாமில் 'ஆப்சென்ட்'

Posted by:
Published: Sunday, November 11, 2012, 12:11 [IST]
 

ஹர்பஜன்சிங்குக்கு என்னாச்சு? முதல் நாள் பயிற்சி முகாமில் 'ஆப்சென்ட்'
 

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி முகாமின் முதல் நாளில் ஹர்பஜன்சிங் கலந்து கொள்ளாததது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் 2-வது நாள் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றிருக்கிறார்.

ஹர்பஜன்சிங்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் வரும் 15-ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான 3 நாள் பயிற்சி முகாம் மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் ஹர்பஜன்சிங் தவிர 14 பேரும் கலந்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெற்ற முதல்நாள் பயிற்சியில் ஹர்பஜன் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இரண்டாம் நாளான இன்று அவர் பயிற்சியில் இணைந்து கொண்டார்.

ஜாகீர்கான்

இதேபோல் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கானின் உடல் தகுதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த வாரம் நடந்த ரஞ்சி டிராபி போட்டியில் அவர் காயம் அடைந்தார் என்றாலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்பதால் தேர்வு ஆனார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் தனது உடல் தகுதியை தெரியப்படுத்த வேண்டும் என்று தேர்வு குழு உத்தரவிட்டு இருந்தது. நேற்றைய பயிற்சியில் ஜாகீர்கானால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

English summary
Using the centre pitch at the Brabourne Stadium and simulating match-like situations seemed to be the primary objective of the Indian team management on the second day of the preparatory camp here.
கருத்தை எழுதுங்கள்