Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

பிரேசில் அழகி இசபெல்லியிடம் 'அவுட்' ஆனார் கோஹ்லி

Posted by:
Published: Sunday, November 11, 2012, 15:17 [IST]
 

பிரேசில் அழகி இசபெல்லியிடம் 'அவுட்' ஆனார் கோஹ்லி
 

மும்பை: இந்திய இளம் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி இசபெல்லி லெய்ட் வலையில் வீழ்ந்திருக்கிறார்!

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதியன்று இளம்பெண் ஒருவருடன் கோஹ்லி ஜாலியாக உலாவந்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் இது தொடர்பாக கோஹ்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சிங்கப்பூரில் கோஹ்லியுடன் ஜோடி போட்ட இளம்பெண், இசபெல்லி லெய்ட் என தெரியவந்திருக்கிறது. கோஹ்லி மீதான காதல் காரணமாக மும்பையில் குடியேறிவிட்டார் இசபெல்லி. கோஹ்லியின் சொந்த ஊரான டெல்லிக்கு அடிக்கடி விசிட் அடித்தும் வருகிறார். இப்போதும் இந்த ஜோடி ஜாலி ஷாப்பிங் சென்று வருகிறது.

இதேபோல் தமது சக வீரர்களிடம் நண்பர் என்றே இசபெல்லியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். ஏற்கனவே நடிகை சாரா ஜேனுடன் விராத் கோஹ்லி நட்பாக பழகி வருவதாக முன்பு செய்திகள் வெளியாகியிரு்ந்தன என்பது நினைவிருக்கலாம். இந்த சாரா ஜேன், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா.... இளம் நட்சத்திரம் ஒன்று இப்படி பிரேசில் வலையில் 'அவுட்' ஆகிடுச்சே!

English summary
The mystery woman who was spotted shopping with cricketer Virat Kohli in Singapore last June is reportedly a Brazilian model named Izabelle Leite.
கருத்தை எழுதுங்கள்