Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வீடியோ கான்பரன்ஸ் மூலம் என்னை விசாரிக்கலாமே... சொல்கிறார் 'எஸ்கேப்' லலித் மோடி

Posted by:
Published: Wednesday, November 14, 2012, 15:44 [IST]
 

வீடியோ கான்பரன்ஸ் மூலம் என்னை விசாரிக்கலாமே... சொல்கிறார் 'எஸ்கேப்' லலித் மோடி
 

மும்பை: வீடியோ கான்பரன்ஸ் மூலம் என்னிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த முன்வருமானால் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆகி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ஐபிஎல் போட்டிகள் பெரும் பிரபலமடைய லலிதா மோடிதான் காரணம். ஆனால் எந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தாரோ அதே அளவுக்கு ஊழலிலும் உச்சத்தைத் தொட்டு நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு மாறிப் போனவர் மோடி.

அவர் மீது பல்வேறு வகையான ஊழல் புகார்கள், மோசடிப் புகார்கள் கிளம்பின. வழக்குகளும் பாய்ந்தன. இதையடுத்து நாட்டை விட்டுஓடி விட்டார் மோடி. தற்போது லண்டன் உள்ளிட்ட இடங்களில் மாறி மாறி வசித்து வருகிறார்.

அவர் தொடர்பான வழக்குகள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் போடப்பட்டுள்ளன. விசாரணைக்காக நேரில் வர அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இதையடுத்து அவரை லண்டனிலிருந்து நாடு கடத்திக் கொண்டு வரும் முயற்சிகளில் விசாரணை அமைப்புகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

இதனால் பயந்து போன மோடி, தற்போது சற்றே இறங்கி வந்துள்ளார். தன்னிட்ம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு சம்மதித்தால், தானும் விசாரணைக்கு தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதேபோல விசாரணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் லண்டனுக்கு வந்தால் தான் நேரடியாக விசாரணைக்கு உடன்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
Former IPL commissioner Lalit Modi today reiterated his willingness to co-operate with the Enforcement Directorate (ED) and income tax authorities. The ED wants to interrogate him regarding the alleged IPL money laundering case. Modi said that he was willing to face the authorities via video conference or would fly them to London.
கருத்தை எழுதுங்கள்