Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அகமதாபாத் டெஸ்ட் போட்டியைப் புறக்கணித்த செய்தி நிறுவனங்கள்

Posted by:
Published: Thursday, November 15, 2012, 13:57 [IST]
 

 

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று தொடங்கிய இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை சர்வதேச செய்தி நிறுவனங்கள் புறக்கணித்தன.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி குறித்த செய்திகளை சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதற்கு சர்வதேச செய்தி நிறுவனங்கள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன. தாம்சன் ராய்ட்டர்ஸ், ஏஎப்பி, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்டவை இந்தப் போட்டி குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் சேகரிப்பதில்லை, வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்து புறக்கணிப்பு செய்தன.

சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு நாங்களே புகைப்படம் தருவோம். அவர்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
International news agencies today decided to boycott the high-profile Test series between India and England which began here to protest against the restrictions imposed by the BCCI on some photo agencies covering the tour. International agencies Thomson Reuters, Agence France-Presse and Associated Press decided to suspend reports from the tour as well as pictures. The Press Association, national agency in the United Kingdom, will not also supply photographs, according to a release issued by the News Media Coalition (NMC).
கருத்தை எழுதுங்கள்