Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வீரேந்திர ஷேவாக் அபார சதம்.. புஜாரா 98.. வலுவான நிலையில் இந்தியா

Posted by:
Updated: Thursday, November 15, 2012, 17:55 [IST]
 

அகமதாபாத்: வீரேந்திர ஷேவாக்கின் அபார சதத்தின் உதவியாலும், சட்டேஸ்வர் புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தாலும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையை எட்டியது.

வீரேந்திர ஷேவாக் அபார சதம்.. புஜாரா 98.. வலுவான நிலையில் இந்தியா
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஷேவாக்கும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை இந்தியாவுக்குக் கொடுத்தனர். குறிப்பாக ஷேவாக் பட்டாசாகப் பொறிந்து தள்ளினார். மறுபக்கம் கம்பீர் மிகவும் நிதானமாக ஷேவாக்குக்குக் கம்பெனி கொடுத்து நிலைத்து நின்றார்.

ஷேவாக் அதிரடியாக ஆடியது ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது அதிரடியை ரசிகர்கள் காண நேரிட்டது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக ஆடிய ஷேவாக் 117 பந்துகளை சந்தித்து ஒவ்வொரு பந்தையும் ரன்னாக்கி கொளுத்தி விட்டார். 117 ரன்கள் எடுத்த அவர் 15 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார்.

கம்பீர் மறுபக்கம் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 111.

ஷேவாக் போன பின்னர் புஜாரா மிகப் பொறுப்பாகவும், நிதானமாகவும் ஆடத் தொடங்கினார். தேவையில்லாமல் பந்துகளைத் தொடுவதை தவிர்த்து ஆடிய அவர் ஆட்ட நேர இறுதி வரை ஆட்டமிழக்காமல் 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் யுவராஜ் சிங் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

விராத் கோஹ்லியும், சச்சினும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. சச்சின் பங்கு 13 ரன்கள்தான். கோஹ்லி 19 ரன் எடுத்தார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்குப் போயிருந்த இந்திய அணி அங்கு பெரும் தோல்வியுடன் திரும்பி வந்தது. எனவே இந்த டெஸ்ட் தொடரை வென்று இங்கிலாந்தை இந்தியா பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Story first published:  Thursday, November 15, 2012, 8:45 [IST]
English summary
India meet England in its first test match in Ahmadabad today. Both the teams will play 4 tests. India hope for best with its specialist spinners Ashwin and Pragyan Ojha to beat English side.
கருத்தை எழுதுங்கள்