Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கங்குலி என் ஹீரோ: ஷாருக்கான்

Posted by:
Published: Friday, November 16, 2012, 10:30 [IST]
 

கங்குலி என் ஹீரோ: ஷாருக்கான்
 

சௌரவ் கங்குலிக்கும் ஷாருக்கானுக்கும் இடையே யான மோதல் ஊரறிந்த விசயம். ஆனால் தற்போது கங்குலியை தன்னுடைய ஹீரோ என்று உலகறிய கூறியுள்ளார் ஷாருக்.

ஐபிஎல் டீமில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்த போது அந்த அணியின் இணை உரிமையாளர் ஷாருக்கானுடன் மோதல் மூண்டது. இருவருக்கும் இடையேயான முட்டல் மோதலால் கேகேஆர் அணியில் இருந்து வெளியேறினார் சவுரவ்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் கங்குலி என்று கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் நான் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய ஹீரோ சௌரவ்தான் என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது மட்டுமல்ல அவருக்கு நேரம் கிடைத்தால் ஈடன் கார்டன் மைதானத்தில் அமர்ந்து கொல்கத்தா அணியின் சிறந்த மேட்ச்களை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறி கொல்கத்தா கிரிக்கெட் ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.

அரசியல்ல மட்டுமல்ல கிரிக்கெட்லையும் இதெல்லாம் சாதாரணம்பா என்பதுபோல ஷாருக் பேசியதை கொல்கத்தாவே ஆச்சரியமாக பார்க்கிறதாம்.

English summary
"Beyond IPL and beyond the bits and pieces, Sourav Ganguly is without any argument among the greatest of cricketers this country has ever produced. We can never take that away from him," said Shah Rukh. "He is the coolest cricketer ever produced. He is a hero for me. With him at the helm, we put up our team together," he said.
கருத்தை எழுதுங்கள்