Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

புஜாரா இரட்டை சதம் அடித்து அபாரம்- 521 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா

Posted by:
Published: Friday, November 16, 2012, 17:38 [IST]
 

புஜாரா இரட்டை சதம் அடித்து அபாரம்- 521 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா
 

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் 2- வது நாளில் இந்தியாவின் புஜாரா 206 ரன்கள் அடித்து அபாரமாக ரன் குவித்திருந்தார் இந்திய அணி முதல் இன்னிங்சை 8 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சை ஆடிவரும் இங்கிலாந்தின் விக்கெட்டுகளோ மளமளவென சரிவடைந்தது.

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்களை இந்தியா எடுத்தது. இந்தியாவின் புஜாரா 98 ரன்களுடனும் யுவராஜ் சிங் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் 190 பந்தில் 13 பவுண்டரிகளுடன் முதல் சதத்தைக் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த யுவராஜ்சிங்கும் அரைசதம் அடித்தார். யுவராஜ் சிங் 74 ரன்களிலும் டோனி 5 ரன்களிலுன் அவுட்டாகினர். ஆனால் புஜாரா நிலைத்து ஆடினார். அஸ்வின், ஜாகீர்கான் ஆட்டமிழந்திருந்தாலும் புஜாரா இரட்டை சதமும் அடித்தார். அவர் 206 ரன்களுடன் களத்தில் நின்றபோது இந்திய அணியின் ஸ்கோர் 521 ஆக இருந்தது. அப்போது முதல் இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. அந்த அணியின் காம்ப்டன் 9 ரன்களிலும் அண்டர்சன் 2 ரன்களிலும் வீழ்ந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் 41 ரன்களை 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி எடுத்திருக்கிறது. 22 ரன்களுடன் குக்கும் 6 ரன்களுடன் பீட்டர்சனும் களத்தில் இருக்கின்றனர்.

English summary
Pujara showed immense concentration and skill to notch up his maiden Test double century as India put themselves in the driver's seat in the first Test by posting a mammoth first innings total and then compounded England's misery with three early jolts on Friday.
கருத்தை எழுதுங்கள்