Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை பதம் பார்த்த இந்திய சுழல் பந்துகள்

Posted by:
Published: Saturday, November 17, 2012, 15:04 [IST]
 

அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை பதம் பார்த்த இந்திய சுழல் பந்துகள்
 

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்த இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் புஜாரா 206 ரன்களை அதிரடியாகக் குவித்தார். ஷேவாக் 117 ரன்களையும் யுவராஜ்சிங் 74 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் நேற்று முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது இங்கிலாந்து. நேற்றைய ஆட்ட முடிவின் போது 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்களை எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் இங்கிலாந்துக்கு படு சோதனையாக இருந்தது. பாலோ ஆனைத் தவிர்க்க 279 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்தது இங்கிலாந்து. ஆனால் தமிழக வீரர் அஸ்வின் மற்றும் ஓஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சுகளில் அந்த அணி நிலைகுலைந்து மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுக்க நேர்ந்தது. ஓஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணியால் மொத்தம் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி பாலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வருகிறது.

English summary
India forced England to follow on after the visitors folded for 191 with left-arm spinner Pragyan Ojha grabbing his career's fourth five-wicket haul in the first cricket Test here today.
கருத்தை எழுதுங்கள்