Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து

Posted by:
Updated: Sunday, November 18, 2012, 17:27 [IST]
 

அகமதாபாத்: அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது இன்னிங்சில் இந்திய சுழற்பந்தில் நிலைகுலைந்து பாலோ ஆன் ஆன இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் அபாரமாக ஆடியது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியைவிட 10 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் கூக் 168 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்க்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 521 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் புஜரா இரட்டை சதமடித்தார். சேஷாவாக்கும் ஒரு சதம் அடித்திருந்தார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஓஜாவின் சுழற்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனது. 191 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டு பாலோ ஆன் ஆனது இங்கிலாந்து. பின்னர் நேற்று 2-வது இன்னிங்சை ஆடத் தொடங்கியது இங்கிலாந்து.

இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் கூக் சதமடித்தார். ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. கூக் 168 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். மொத்தம் 10 ரன்கள் இந்தியாவை கூடுதலாக எடுத்திருக்கிறது இங்கிலாந்து.

Story first published:  Sunday, November 18, 2012, 14:00 [IST]
English summary
Following-on and needing 330 to avoid an innings defeat, England have managed to wrest some kind of initiative by crossing 100-mark in a wicketless final session -- commendable, given that more than half their team had gone back to the hut at this score in the first innings.
கருத்தை எழுதுங்கள்