Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பழிதீர்த்தது இந்தியா!

Posted by:
Updated: Monday, November 19, 2012, 13:22 [IST]
 

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் துவம்சம் செய்ததற்கு தற்போது முதல் போட்டியில் பழிதீர்த்திருக்கிறது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பழிதீர்த்தது இந்தியா!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 521ரன்களைக் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது. இந்தியாவின் புஜாரா இரட்டை சதமடித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அணியோ இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஓஜாவின் சுழற்பந்தில் நொறுங்கிப் போயினர். முதல் இன்னிங்சில் 191 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. பின்னர் பாலோ ஆனில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது இங்கிலாந்து.

நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தை அபாராமாக வெளிப்படுத்தியது இங்கிலாந்து. கேப்டனும் தொடக்க நிலைவீரருமான குக் சதமடித்தார். பிரையர் 84 ரன்கள் எடுத்தார். இந்த அபாரம் இன்று தொடர முடியாமல் போனது சோகம்! பிரையர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 356. சிறிது நேரத்தில் குக்கும் 176 ரன்களில் ஆட்டமிழ்ந்து போனார். இதைத் தொடர்ந்து ஆட வந்த இங்கிலாந்து அணி வீரர்களால் நிலைக்க முடியவில்லை. 406 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இங்கிலாந்து. ஓஜா 4 விக்கெட்டுகளை பறித்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெடுகளைக் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 77 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சில் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா 41 ரன்கள் எடுத்தார். சேவாக் 25 ரன்களை எடுத்தார். சேவாக் அவுட் ஆனாலும் கோஹ்லி புஜாராவுக்கு பலமாக இருந்தார். 15.3 வது ஓவரில் இந்திய அணி 80 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் விளையாடிய இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. தற்போது அதற்கு பழிதீர்த்துக் கொண்டிருக்கிறது இந்தியா!

Story first published:  Monday, November 19, 2012, 12:25 [IST]
English summary
Pragyan Ojha took four wickets as following on, England were bowled out for 406 runs in their second innings on the fifth day of the first Test at Sardar Patel Stadium at Motera in Ahmedabad on Monday
கருத்தை எழுதுங்கள்