Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

23ல் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமீரக தமிழ்ச் சங்க கிரிக்கெட் இறுதிப் போட்டி

Posted by:
Published: Monday, November 19, 2012, 15:16 [IST]
 

துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 2012ன் இறுதிப் போட்டி வரும் 23ம் தேதி காலை 8 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

23ல் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமீரக தமிழ்ச் சங்க கிரிக்கெட் இறுதிப் போட்டி
அமீரக தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இறுதிப் போட்டிகள் வரும் 23ம் தேதி காலை 8 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

அந்த தினத்தில் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டி, அமீரக தமிழ்ச் சங்க மகளிர் அணி மற்றும் சங்கத்தின் உதவிக் குழுவினருக்கான சிறப்பு போட்டியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு களிக்க வருமாறு சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெண்கள் அணி்க்கு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி குறித்த விவரம் அறிய விரும்புவோர் அமீரகத் தமிழ்ச் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


English summary
The grand finale of the UAE Tamil Sangam's Tamil Nadu Cricket Tournament 2012 will be held on november 23 at Sharjah cricket stadium. Men and children's finals, special match for UTS Ladies Team and UTS Support Team (Members) will be held on that day.
கருத்தை எழுதுங்கள்