Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

110 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் சாதனை: 10 வது விக்கெட்டாக இறங்கி சதமடித்த ஹஸன்!

Posted by:
Updated: Thursday, November 22, 2012, 12:25 [IST]
 

குல்னா (பங்களாதேஷ்): மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பத்தாவது பேட்ஸ்மேனாக இறங்கி செஞ்சுரி அடித்து சாதனை புரிந்துள்ளார் பங்களாதேஷ் வீரர் அபுல் ஹஸன்.

110 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இப்படி ஒரு சாதனை படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

110 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் சாதனை: 10 வது விக்கெட்டாக இறங்கி சதமடித்த ஹஸன்!
20 வயதாகும் ஹஸனுக்கு இதுதான் முதல் போட்டி. இடது கை பேட்ஸ் மேனான அவர், வலது கையில் மீடியம் பேஸ் போடும் பவுலரும் கூட.

குல்னாவில் உள்ள ஷேக் அபு நாசர் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல்நாளான இன்று 108 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் இந்த ஸ்கோரை அவர் எட்டினார்.

சொற்ப ரன்களில் முதல் இன்னிங்ஸை இழக்கவிருந்த பங்களாதேஷ், இவரது செஞ்சுரி மூலம் 8 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்தது.

ஹஸனுக்கு ஈடு கொடுத்து ஆடிய மஹ்மதுல்லா 72 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்பு 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ரெக்கி டப் 10 விக்கெட்டுக்கு களமிறங்கி 104 ரன்களைக் குவித்தார். ஆனால் இதனை தனது இரண்டாவது இன்னிங்ஸில்தான் எடுத்தார் டப். ஹஸனோ தனது முதல் போட்டியில், அதுவும் முதல் இன்னிங்ஸிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Story first published:  Wednesday, November 21, 2012, 19:19 [IST]
English summary
Bangladesh's Abul Hasan became only the second debutant batsman in Test history to score a century batting at number 10. He achieved the feat against West Indies on the first day of the second Test here on Tuesday.Hasan is only the second batsman to hit century on debut at No. 10. That too after 110 years!
கருத்தை எழுதுங்கள்