Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஏர்டெல்லை தோற்கடித்து ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை பெற்ற பெப்சி

Posted by:
Updated: Thursday, November 22, 2012, 12:23 [IST]
 

ஏர்டெல்லை தோற்கடித்து ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை பெற்ற பெப்சி
 

மும்பை: ஏர்டெல் நிறுவனத்தை தோற்கடித்து பெப்சி நிறுவனம் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப்பை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் பெப்சி ஐபிஎல் என்றே அழைக்கப்படும்.

டிஎல்எப் நிறுவனம் ரூ.200 கோடி கொடுத்து 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்பை பெற்றது. அதன் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. இதையடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கான ஸ்பான்சர்ஷிப்பை பெற நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரின. அதில் ரூ. 316 கோடி ஒப்பந்தப்புள்ளி கோரிய ஏர்டெல் நிறுவனத்தை தோற்கடித்து ரூ.396.8 கோடி கொடுத்து ஸ்பான்பர்ஷிப்பை பெப்சி நிறுவனம் பெற்றுள்ளது.

இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் பெப்சி ஐபிஎல் என்றே அழைக்கப்படும்.

இது குறித்து பெப்சி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் டைரக்டர் தீபிகா வாரியர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக எங்களுக்கும், கிரிக்கெட்டுக்கும் தொடர்பு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி என்றார்.

Story first published:  Wednesday, November 21, 2012, 17:36 [IST]
English summary
Soft drink giants Pepsi on wednesday became the new title sponsors of the cash-rich Indian Premier League after it won the bid for title rights for five years by paying a whopping Rs 396.8 crores. Pepsi pipped Aircel, which had offered Rs 316 crores.
கருத்தை எழுதுங்கள்