Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

வாங்கப்பா, வாங்கடே பிட்ச் எப்படியிருக்குன்னு பார்ப்போம்... ஜாகிர், ஹர்பஜன் ஆய்வு

Posted by:
Published: Thursday, November 22, 2012, 14:09 [IST]
 

வாங்கப்பா, வாங்கடே பிட்ச் எப்படியிருக்குன்னு பார்ப்போம்... ஜாகிர், ஹர்பஜன் ஆய்வு
 

மும்பை: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள மும்பை வாங்கடே மைதானத்தின் பிட்ச் எப்படி உள்ளது என்று பந்து வீச்சாளர்கள் ஜாகிர்கானும், ஹர்பஜன் சிங்கும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது வாங்கடே மைதான பிட்ச் பராமரிப்பாளர் சுதிர் நாயக் உடன் இருந்தார். இவர் ஜாகிர்கானின் முன்னாள் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் இந்திய பிட்ச்களை சுழற்பந்து வீச்சுக்கேற்றார் போல வடிவமைக்க வேண்டும் என்று கேப்டன் டோணி கூறியிருந்தார். இந்த நிலையில் வாங்கடே பிட்ச் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் வாங்கடே மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி நாளை தொடங்குகிறது.

இப்போட்டி வீரேந்திர ஷேவாக்குக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இவர் சதமடித்தால், 100வது டெஸ்ட்டில் சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். சச்சின் உள்படஇந்திய கிரிக்கெட் வீரர் எவருமே தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் சதம் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Senior players Zaheer Khan and Harbhajan Singh on Wednesday, inspected the pitch on which the second Test match against England will be played. The duo had a look of the pitch after their batting session at the nets. They were accompanied by Wankhede Stadium curator Sudhir Naik, who was earlier Zaheer Khan's coach.
கருத்தை எழுதுங்கள்